/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
யானைகள் தாக்கியதில் பஸ் கண்டக்டர் காயம்
/
யானைகள் தாக்கியதில் பஸ் கண்டக்டர் காயம்
ADDED : அக் 06, 2024 01:50 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் ஊத்து பகுதியில் அரசு பஸ்சை நிறுத்தி இருந்தபோது இரண்டு யானைகள் பஸ்சை சேதப்படுத்தின. யானை தாக்கியதில் கண்டக்டர் பாடகலிங்கம் காயமுற்றார்.
மாஞ்சோலை தேயிலைத்தோட்டப்பகுதியில் காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய தோட்டங்கள் உள்ளன. திருநெல்வேலியில் இருந்தும் பாபநாசம் பணிமனையில் இருந்தும் இயக்கப்படும் அரசு பஸ்கள் ஊத்து தேயிலை தோட்டத்திற்கு சென்று திரும்பும்.
நேற்று முன்தினம் சென்ற அரசு பஸ்சில் டிரைவர் ராஜ்குமார், கண்டக்டர் பாடகலிங்கம் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நேற்று காலை ஊத்து பகுதியில் பஸ் நின்ற போது அருகில் இரண்டு காட்டு யானைகள் வந்தன.
அவற்றை பார்த்ததும் இருவரும் பயந்து பஸ்சுக்குள் ஏறினர். இருப்பினும் யானைகள் பஸ்சின் கண்ணாடியை சேதப்படுத்தின. பஸ்சுக்குள் ஏற முயன்ற கண்டக்டர் பாடகலிங்கத்தை யானை ஒன்று லேசாக தாக்கியது. இதில் அவர் லேசாக காயமுற்றார்.
டிரைவர் பஸ் அடியில் சென்றதால் தப்பித்தார். பிறகு இருவரும் கூச்சலிட்டதால் யானைகள் அங்கிருந்து சென்றன. பின்னர் இருவரும் பாபநாசம் பணிமனைக்கு பஸ்சை கொண்டு வந்தனர்.