/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
அலைபேசியில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்
/
அலைபேசியில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்
ADDED : நவ 30, 2024 02:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலியில் அலைபேசியில் பேசியபடி அரசு பஸ்சை ஓட்டி பள்ளத்தில் விட்ட டிரைவர் கணேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நேற்று காலை தென்கலம் புதுார் சென்ற அரசு டவுன் பஸ்சின் டிரைவர் கணேசன் அலைபேசியில் பேசியபடியே கவனக்குறைவாக ஓட்டினார்.
ஒரு திருப்பத்தில் திரும்பாமல் பஸ் பள்ளத்திற்குள் சென்றது. இதில் முன்புற கண்ணாடிகள் உடைந்தன. 20 பயணிகள் லேசான காயமடைந்தனர்.
இது குறித்து விசாரணை நடத்திய போக்குவரத்து நிர்வாகம் டிரைவர் கணேசனை நேற்று மாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.

