/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நர்ஸை திருமணம் செய்ய மறுப்பு வனக்காப்பாளர் மீது வழக்கு
/
நர்ஸை திருமணம் செய்ய மறுப்பு வனக்காப்பாளர் மீது வழக்கு
நர்ஸை திருமணம் செய்ய மறுப்பு வனக்காப்பாளர் மீது வழக்கு
நர்ஸை திருமணம் செய்ய மறுப்பு வனக்காப்பாளர் மீது வழக்கு
ADDED : டிச 20, 2024 01:35 AM
திருநெல்வேலி:ஒட்டன்சத்திரம் நர்சிடம் பழகி கர்ப்பத்திற்கு காரணமான வனக்காப்பாளர் திருமணம் செய்ய மறுத்ததால் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம் மருதன்வாழ்வை சேர்ந்த கண்ணன் மகன் கவுதம் 30.
இவர் வனத்துறையில் வனக்காப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர் திண்டுக்கல்லில் பணியாற்றியபோது ஒட்டன்சத்திரத்தில் தனியார்மருத்துவமனையில் நர்ஸ் ஆக பணியாற்றி வரும் மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த 21 வயது இளம் பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கி பழகினார். இதில் அவர் கர்ப்பமானார். அவருக்கு ஆன்லைன் மூலம் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளார்.
அதன் பின்னர் கவுதம் திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதிக்கு வனத்துறையில் பணி மாறுதல் பெற்றார். இங்கு வந்த பிறகும் இளம் பெண் களக்காட்டில் வந்து அவருடன் ஒன்றாக இருந்துள்ளார்.
திருமணம் செய்ய வலியுறுத்திய போது கவுதமும், அவர் தந்தை கண்ணனும் இளம்பெண் வேறு சமூகம் என்பதால் திருமணம் செய்ய மறுத்தனர். இதுகுறித்து இளம் பெண்ணின் புகாரில், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் கவுதம், தந்தை மீது வழக்கு பதிவு செய்தனர்.