/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
/
ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
ரூ.3.59 கோடி சொத்து குவிப்பு; மாநகராட்சி இன்ஜினியர், மனைவி மீது வழக்கு
ADDED : ஏப் 29, 2025 07:02 AM

திருநெல்வேலி :திருநெல்வேலி மாநகராட்சி உதவி இன்ஜினியர் லெனின் 54, அவரது மனைவி சாந்தகுமாரி 6 ஆண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகராட்சி உதவி இன்ஜினியர் லெனின். இவரது மனைவி சாந்தகுமாரி திருநெல்வேலி தூய சவேரியார் கல்லூரியில் விலங்கியல் துறையில் உதவி பேராசிரியையாக பணிபுரிகிறார்.
மகன் பேபியன் டில்லியில் ஐ.ஏ.எஸ்., கோச்சிங் பயின்று வருகிறார். மகள் பேபியோ பிளஸ்சி நீட் கோச்சிங் பயின்று வருகிறார்.
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி அருகே ஒட்டநத்தம் கிராமத்தை சேர்ந்த லெனின் திருநெல்வேலி சாந்திநகரில் வசிக்கிறார். லெனின் திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி இன்ஜினியராக 1997 முதல் பணிபுரிகிறார். 28 ஆண்டுகளாக திருநெல்வேலி மாநகராட்சியிலேயே பணியில் இருப்பதால் அனைத்து துறைகளும் அவருக்கு அத்துப்படி.
அவரது மனைவி சாந்தகுமாரி 2016 முதல் தூய சவேரியார் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவர்கள் வருமானத்திற்கு அதிகமாக பல இடங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் சென்றன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மேலிட உத்தரவின் பெயரில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுதா விசாரணை நடத்தினார். சொத்துக்களை வாங்கி குவித்த ஆதாரங்கள் சிக்கின.
2018ம் ஆண்டு முதல் 2024 வரை மட்டும் அவர்கள் வருமானத்திற்கு அதிகமாக ரூ.3 கோடியே 59 லட்சத்து 21 ஆயிரத்து 589 மதிப்புள்ள சொத்து குவித்தது கண்டறியப்பட்டது.
இருவர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து 2 பேரிடமும் தீவிர விசாரணை நடந்தது.