ADDED : செப் 08, 2025 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி; இரு ஜாதியினரிடையே மோதல் ஏற்படும் வகையில் முகநுாலில் வீடியோ பதிவிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மூன்றடைப்பு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பத்தினிப்பாறை கிராமத்தை சேர்ந்த நந்தா 19, சேர்மன்துரை 32, முகநுாலில் இரு தரப்பினரிடையே பிரச்னையை துாண்டும் வகையில் வீடியோ, புகைப்படம் பதிவிட்டனர்.மூன்றடைப்பு எஸ்.ஐ., முருகேஷ் இருவரையும் கைது செய்தார்.