/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாஞ்சோலையில் மத்திய குழு ஆய்வு
/
மாஞ்சோலையில் மத்திய குழு ஆய்வு
ADDED : ஜூன் 25, 2025 01:52 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்ற தேவையான நடவடிக்கைகள் குறித்து, சித்தாந்த தாஸ் தலைமையிலான மத்திய உயர்மட்ட குழு நேற்று ஆய்வு செய்தது.
இந்தியா முழுவதும் புலிகள் காப்பகங்கள் ,சரணாலயங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை சேதமின்றி பாதுகாப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உயர்மட்ட ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது. சித்தாந்ததாஸ் தலைமையிலான குழுவினர் தற்போது நாடு முழுவதும் வனப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். நேற்று திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில் ஆய்வு செய்தனர். குழு உறுப்பினர்கள் சந்திர பிரகாஷ் கோயல், ஜெ.ஆர்.பட், சுனில் லிமாயி ஆகியோர் உடன் வந்தனர்.
திருநெல்வேலி கலெக்டர் சுகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்தக் குழுவிற்கும் மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மறுவாழ்வுக்கும் தொடர்பில்லை. இருப்பினும் மாஞ்சோலையில் இன்னமும் தங்கி இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை குழுவிடம் வழங்கினர். மாலை வரை நடந்தஆய்வு க்கு பிறகு திருநெல்வேலி கிளம்பி வந்தனர். இன்று தேனி மாவட்டத்தில் மேகமலை வன உயிரின சரணாலயத்தில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.