/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மருத்துவ கழிவுகளை ஆய்வு செய்த கேரளகுழு எடுத்துச் செல்ல கலெக்டர் வலியுறுத்தல்
/
மருத்துவ கழிவுகளை ஆய்வு செய்த கேரளகுழு எடுத்துச் செல்ல கலெக்டர் வலியுறுத்தல்
மருத்துவ கழிவுகளை ஆய்வு செய்த கேரளகுழு எடுத்துச் செல்ல கலெக்டர் வலியுறுத்தல்
மருத்துவ கழிவுகளை ஆய்வு செய்த கேரளகுழு எடுத்துச் செல்ல கலெக்டர் வலியுறுத்தல்
ADDED : டிச 21, 2024 02:09 AM

திருநெல்வேலி:திருநெல்வேலியில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை கேரள அரசு அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அவர்களிடம் கழிவுகளை கேரளாவுக்கு எடுத்துச் செல்லுமாறு கலெக்டர் கார்த்திகேயன் வலியுறுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர், பழவூர், கோடகநல்லூரில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை லாரிகளில் கொண்டு வந்து கொட்டினர்.
இதில் தாமாக முன்வந்து தலையிட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் மருத்துவக் கழிவுகளை கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மீண்டும் எடுத்துச் செல்ல வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து கேரள மாநில அதிகாரிகள் குழு நேற்று நடுக்கல்லூரில் ஆய்வு செய்தனர்.
திருவனந்தபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலர் கோபகுமார், கேரள மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் இன்ஜினியர் பின்சி, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் சபா நசீம்முதின் உள்ளிட்ட 8 அதிகாரிகள் வந்திருந்தனர். கழிவுகள் கொட்டப்பட்டிருந்த இடங்களில் ஆய்வு செய்தனர். சம்பவ இடத்தில் ஆபத்தான மருத்துவ கழிவுகள் எதுவும் இல்லை எனவும் மருத்துவ கழிவுகள் இருப்பதை ஒப்புக்கொண்டனர்.
தங்கள் அறிக்கையை கேரள அரசிடம் சமர்ப்பிப்பதாகவும், தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த உத்தரவின்படி, கேரள அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.
கேரள அரசு குழுவினர் திருநெல்வேலியில் கலெக்டர் கார்த்திகேயனை சந்தித்தனர்.
அவர்களிடம் கலெக்டர், மருத்துவ கழிவுகளை கழிவு மேலாண்மை நிறுவனத்திடம் ஒப்படைத்ததாக கூறப்படுவதன் மெய்த்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.
நிறுவனத்திடம் ஒப்படைத்தது உண்மை எனில் அவை எப்படி அனுப்பப்பட்டன, அனுப்பியது யார், வந்து கொட்டியது யார், என ஆய்வு செய்ய வேண்டும்.
கழிவுகள் எந்த பிரச்னையும் இல்லாதவை என்றால் அவற்றை இடைத்தரகர்களை அமர்த்தி இவ்வளவு தொகை செலவு செய்து இங்கு கொண்டு கொட்ட வேண்டிய அவசியம் என்ன. இவ்விவகாரம் குறித்து தீர விசாரித்திட வேண்டும்.
இது போன்ற செயல்பாடுகள் பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் உயிருக்கு பேராபத்தை ஏற்படுத்த கூடியவை என்பதாலும் நீர்வளம் மற்றும் நில வளத்தை பாதித்து சுற்றுசூழலை பாதிக்கக்கூடியவை என்பதாலும் இனிவரும் காலங்களில் இது போல நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழுவினரிடம் வலியுறுத்தினார்.