/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சீட்டு விளையாடிய மாநகராட்சி ஊழியர்கள்
/
சீட்டு விளையாடிய மாநகராட்சி ஊழியர்கள்
ADDED : ஏப் 11, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியின் தாமிரபரணி நீரேற்று நிலையம் சமாதானபுரம், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு அருகில் உள்ளது. பொதுமக்களுக்கு லாரிகளில் தண்ணீர் விநியோகிக்க வேண்டிய நேரத்தில், மாநகராட்சி ஊழியர்கள், அங்குள்ள வளாகத்தில் சீட்டு விளையாடியதாக 7வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் இந்திராவின் கணவர் மணி புகார் தெரிவித்தார்.
தி.மு.க., பிரதிநிதியாக இருக்கும் மணி, தாமிரபரணி தண்ணீர் தொட்டி பகுதிக்கு சென்று ஊழியர்கள் சீட்டாட்டத்தில் ஈடுபடும் வீடியோவை எடுத்து பகிர்ந்தார்.

