/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலி- தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில்
/
திருநெல்வேலி- தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில்
திருநெல்வேலி- தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில்
திருநெல்வேலி- தாம்பரம் இடையே தீபாவளி சிறப்பு ரயில்
ADDED : அக் 24, 2024 07:08 AM

மதுரை: தீபாவளியை முன்னிட்டு தென்மாவட்ட பயணிகளின் வசதிக்காக சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாக திருநெல்வேலி - தாம்பரம் இடையே கூடுதல் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நவ.,3 மாலை 4:00 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு ரயில் (06003) மறுநாள் அதிகாலை 4:10 மணிக்கு தாம்பரம் செல்லும். மறுமார்க்கத்தில் நவ.,4 மதியம் 2:30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06004) மறுநாள் அதிகாலை 5:15 மணிக்கு திருநெல்வேலி செல்லும்.
இவ்விரு ரயில்களும் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டிகள், 3 பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படும்.
இவற்றிற்கான முன்பதிவு துவங்கியது.