/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க., நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
/
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க., நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க., நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறது தி.மு.க., நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
ADDED : மார் 19, 2026 06:18 AM
திருநெல்வேலி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுவதாக பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
திருநெல்வேலியில் அவர் கூறியதாவது:
சொத்து வரி, மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என கூறிவிட்டு பல மடங்கு உயர்த்தியுள்ளனர். மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு நடத்தும் திட்டத்தை அமல்படுத்தவில்லை. மத்திய அரசு தமிழகத்திற்கு சாலைகள், பாலங்கள் அமைக்க ரூ.14 லட்சம் கோடி வழங்கியது. ஆனால் மத்திய அரசு எதையும் செய்யவில்லை என தி.மு.க., பொய் பிரசாரம் செய்கிறது.
மத்திய அரசு வழங்கும் ரேஷன் பொருட்களுக்கு மாநில அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் 22 லட்சம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8900 கொலைகள் நடந்துள்ளன. 1977 பெண்களும், 387 குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர்.
விளாத்திகுளத்தில் பிளஸ்- 2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டது மிகவும் கொடூரமானது.
லாக்கப் மரணங்கள், போலீஸ் ஸ்டேஷன்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரித்துள்ளன. பணத்தை வாரி இறைத்து மக்களை ஏமாற்ற தி.மு.க., முயற்சிக்கிறது. தி.மு.க.,விடம் பல்லாயிரம் கோடி ரூபாய் இருக்கலாம். ஆனால் மக்கள் யாருடன் இருக்கிறார்கள் என்பதே முக்கியம்.
த.வெ.க., தனித்துப் போட்டியிடுவதும், கூட்டணி அமைப்பதும் அவர்களின் உரிமை.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னை வந்தபின் அ.தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்து பா.ஜ.,வுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். தொகுதி மாற்றம் குறித்து வேட்புமனு தாக்கலுக்கு பின் பதிலளிப்பேன் என்றார்.
முன்னதாக பேரையூரைச் சேர்ந்த தி.மு.க., கலை இலக்கியப் பிரிவு அமைப்பாளர் ராஜா தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தனர்.

