/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கடை உரிமையாளர் அடித்துக் கொலை
/
கடை உரிமையாளர் அடித்துக் கொலை
ADDED : மார் 19, 2026 06:22 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் முன்விரோதத்தால் இரும்பு கடை உரிமையாளரை கம்பியால் அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் வனராஜ் 60, கோட்டைவிளைப்பட்டியில் பழைய இரும்பு கடை நடத்தினார். இவரது கடையில் பணிபுரிந்த மாயாண்டி 26, பிரச்னையால் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு வனராஜின் கோடவுனுக்கு வந்த மாயாண்டி, பணம் கேட்டு தகராறு செய்தார். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், இரும்பு கம்பியால் வனராஜ் தலையில் பலமாக தாக்கினார்.
பலத்த காயமடைந்த வனராஜ், தனியார் மருத்துவமனையில் நேற்று காலை இறந்தார்.
விக்கிரமசிங்கபுரம் போலீசார் மாயாண்டியை கைது செய்தனர். பெண் விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்ததா என விசாரிக்கின்றனர்.

