/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஆதவ் அர்ஜூனா யார்? பா.ஜ., தலைவர் கேள்வி
/
ஆதவ் அர்ஜூனா யார்? பா.ஜ., தலைவர் கேள்வி
UPDATED : மார் 20, 2026 08:40 AM
ADDED : மார் 20, 2026 03:03 AM

திருநெல்வேலி: ''பா.ஜ., சார்பில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை. ஆதவ் அர்ஜுனா யார் என்பதே தனக்கு தெரியாது,'' என, திருநெல்வேலியில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஓரிரு நாட்களில் தமிழகம் வர வாய்ப்பு உள்ளது. அதன் பிறகே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கும்.
அமலாக்கத்துறை, வருமானவரித்துறையை பயன்படுத்தி யாரையும் மிரட்ட வேண்டிய அவசியம் பா.ஜ.,வுக்கு இல்லை. தி.மு.க., அமைச்சர்கள் உட்பட பலர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளன.
ஜனநாயகன் படத்திற்கு பா.ஜ., நெருக்கடி கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மையல்ல. தேவையற்ற ஊகங்கள் பரப்பப்படுகின்றன. ஆதவ் அர்ஜுனா யார் என்பதே தெரியாது.
பிரதமர் மோடி கன்னியாகுமரி, கோயம்புத்துார் வரும் தேதி பின் அறிவிக்கப்படும். உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நிதின் நபின், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழகம் வர உள்ளனர். பா.ஜ., ஜாதி, மத அடிப்படையிலான கட்சி அல்ல. இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைவரின் நிகழ்வு களிலும் பங்கேற்கிறோம் என்றார்.

