/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மாணவிக்கு கொடுமை டிரைவருக்கு '25 ஆண்டு'
/
மாணவிக்கு கொடுமை டிரைவருக்கு '25 ஆண்டு'
ADDED : பிப் 26, 2026 07:05 AM

திருநெல்வேலி: கல்லுாரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த டிரைவருக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, திருநெல்வேலி மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருநெல்வேலி, சிங்கம்பாறையை சேர்ந்த, 17 வயது மாணவி, கல்லுாரியில் முதலாம் ஆண்டு படித்தார். அங்கு டிரைவராக பணியாற்றிய சுமேஷ், 25, மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பழகினார். திருமணமான சுமேஷுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
காட்டுப்பகுதிக்கு மாணவியை, 2021 நவம்பரில் அழைத்துச் சென்ற இவர், பாலியல் வன்கொடுமை செய்தார். புகாரின் படி, சேரன்மகாதேவி அனைத்து மகளிர் போலீசார், அவரை கைது செய்தனர்.
திருநெல்வேலி மகிளா நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம் விசாரித்து, சுமேஷுக்கு, 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 15,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

