sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 9 மாத குழந்தை வெட்டிக்கொலை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

/

 9 மாத குழந்தை வெட்டிக்கொலை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

 9 மாத குழந்தை வெட்டிக்கொலை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

 9 மாத குழந்தை வெட்டிக்கொலை வாலிபருக்கு 10 ஆண்டு சிறை


ADDED : பிப் 25, 2026 05:14 AM

Google News

ADDED : பிப் 25, 2026 05:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் திருமணத்திற்கு பெண் தர மறுத்ததால் அதிகாலை வீட்டுக்குள் புகுந்து 9 மாத குழந்தையை வெட்டி கொன்ற வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.16 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப் பளித்தது.

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி தெற்கு மகிழடி பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்டர் ரசல் ராஜ். பணகுடியை சேர்ந்த சிவசங்கரன், ரசல் ராஜின் மகளை திருமணம் செய்து வைக்க கேட்டார்.

ரசல் ராஜ் மறுத்ததால் ஆத்திரத்தில் வீட்டுக்குள் புகுந்து அரிவாளால் தாக்கினார்.

இதில் ரசல் ராஜின் மனைவி எப்சிபாய் படுகாயமடைந்தார்.

அருகில் தூங்கிக் கொண்டிருந்த 9 மாத குழந்தை அக்ஸா குயின்சி தலையில் வெட்டுக் காயமடைந்து பின்னர் இறந்தது. ரசல் ராஜூம் காயமடைந்தார்.

திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கரனை கைது செய்தனர்.

வழக்கு விசாரணை திருநெல்வேலி முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

நீதிபதி செல்வம், கொலையாகாத மரணம் விளைவித்த குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.5,000 அபராதம், கொலை முயற்சி குற்றத்திற்கு தலா 10 ஆண்டு சிறை மற்றும் தலா ரூ.5,000 அபராதம், அத்துமீறி நுழைந்ததற்காக ஒரு ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்தார்.

தண்டனைகள் ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதால் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.16 ஆயிரம் அப ராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us