/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் பலி
/
தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர் பலி
ADDED : பிப் 20, 2025 02:06 AM
வண்ணார்ப்பேட்டை:திருநெல்வேலி வண்ணார்ப்பேட்டை பரணி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 77. நேற்று காலை கிருஷ்ணமூர்த்தி, மனைவி லலிதா, 70, ஆகியோர் திண்டுக்கல் செல்வதற்காக செங்கோட்டை -ஈரோடு ரயிலில் செல்ல திருநெல்வேலி ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன் வந்தனர்.
அந்த ரயில் மூன்றாவது பிளாட்பாரத்தில் வருவதாக இருந்ததால், முதல் பிளாட்பாரத்தில் இருந்து அங்கு செல்ல முயற்சித்தனர். அப்போது லிப்ட், நகரும் படிக்கட்டுகள் வேலை செய்யவில்லை. இதனால் மனைவியை படிக்கட்டுகள் வழியே ஏறி வரும்படி கூறியவர் தண்டவாளத்தில் இறங்கி கடக்க முயற்சித்தார்.
அப்போது திருநெல்வேலியில் இருந்து மும்பை செல்வதற்கு தயாரான ரயில், பிளாட்பாரத்தில் நிற்க பின்னோக்கி வந்தது. இதில் அடிபட்டு கிருஷ்ணமூர்த்தி இறந்தார். பொதுமக்கள் பயன்படுத்தும் நேரங்களில் லிப்ட், நகரும் படிக்கட்டுகள் வேலை செய்வதில்லை என்ற புகார் உள்ளது. நேற்றும் ஒரு உயிரிழப்பை அது ஏற்படுத்தியுள்ளது.

