/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
ஜி.ஹெச்., இன்ஜினியர் துாக்கிட்டு தற்கொலை
/
ஜி.ஹெச்., இன்ஜினியர் துாக்கிட்டு தற்கொலை
ADDED : மார் 12, 2026 10:09 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியராக பணியாற்றியவர் லட்சுமணன், 57. இவரின் மனைவி, பள்ளி ஆசிரியையாக உள்ளார். மகள், பல் மருத்துவம் பயின்று வருகிறார்.
நேற்று முன்தினம், மாலையில் வீடு திரும்பிய மனைவி, மாடிக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு, லட்சுமணன் துாக்கில் தொங்கி, இறந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து, ஐகிரவுண்ட் போலீசுக்கு தெரிவித்தார்.
நிகழ்விடத்துக்கு வந்த போலீசார், லட்சுமணன் உடலை மீட்டனர். அவரின் சட்டைப்பையில், 'என் இறப்புக்கு யாரும் காரணம் இல்லை' என எழுதப்பட்டிருந்த கடிதம் சிக்கியது.பணியின் போது ஏற்பட்ட மன உளைச்சலால், தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது வேறு காரணங்கள் உள்ளனவா என்பது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

