/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
திருநெல்வேலியில் மீண்டும் அரிவாள் வெட்டு
/
திருநெல்வேலியில் மீண்டும் அரிவாள் வெட்டு
ADDED : மார் 09, 2026 04:39 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ஜாதி பெயரை கூறி விவசாயி ஒருவரை 5 பேர் கும்பல் வெட்டியது.
முக்கூடல் அருகே உதயமார்த்தாண்டபுரத்தை சேர்ந்த முருகன் 50, விவசாயி. பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது 5 பேர் கும்பல் அவரை வழிமறித்து ஜாதி பெயரை கூறி திட்டியதுடன், இங்கு குளிக்கக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
போதையில் இருந்த அந்த கும்பல் முருகனை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. அக்கம்பக்கத்தினர் அங்கு வந்ததால், தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி ஓடினர். முருகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தின் பரபரப்பு அடங்காத நிலையில், மீண்டும் அதேபோன்ற சம்பவம் சேரன்மகாதேவி அருகே அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக முக்கூடல் போலீசார் விசாரிக்கின்றனர்.

