/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
போலீஸ் ஸ்டேஷன் மாடியிலிருந்து குதித்த சிறுமிக்கு கால்கள் முறிவு
/
போலீஸ் ஸ்டேஷன் மாடியிலிருந்து குதித்த சிறுமிக்கு கால்கள் முறிவு
போலீஸ் ஸ்டேஷன் மாடியிலிருந்து குதித்த சிறுமிக்கு கால்கள் முறிவு
போலீஸ் ஸ்டேஷன் மாடியிலிருந்து குதித்த சிறுமிக்கு கால்கள் முறிவு
ADDED : ஜூலை 23, 2025 02:33 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே 15 வயது சிறுமியை கடத்தி சென்றவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். போலீஸ் ஸ்டேஷன் விசாரணையின் போது, மாடியில் இருந்த சிறுமி கீழே குதித்ததில் அவரது இரண்டு கால்களும் உடைந்தன.
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையை சேர்ந்தவர் முருகன், 38; கேரளா வில் கூலி வேலை செய்கிறார். இவர், பத்தமடையை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவியுடன் சமூக வலைதளத்தில் பழகினார்.
சில மாதங்களுக்கு முன் சிறுமியை கடத்திச் சென்றார். அவர், போக்சோவில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி மீட்கப்பட்டார்.
சமீபத்தில் ஜாமினில் வெளிவந்தவர், மீண்டும் அச்சிறுமியை வெளியூருக்கு அழைத்து சென்றார். விசாரணையில், இருவரும் திருச்செந்துாரில் இருந்தது தெரிந்து, இருவரையும் போலீசார் மீட்டு வந்தனர்.
முருகனை கைது செய்தனர். சிறுமியை தாயிடம் ஒப்படைக்க முடிவெடுத்தனர். ஆனால், அவர் தாயுடன் செல்ல மறுத்ததால், பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர்.
பத்தமடை மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மாடியில் உள்ளது. அங்கு வைத்து இதுதொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்த போது, சிறுமி திடீரென கீழே குதித்தார்.
இதில், அவரது இரண்டு கால்களும் முறிந்தன. சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2வது முறையாக போக்சோவில் கைதான முருகன் சிறையில் அடைக்கப்பட்டார்.

