sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அரசு பஸ் பயணிக்கு ரூ.20,000 இழப்பீடு

/

அரசு பஸ் பயணிக்கு ரூ.20,000 இழப்பீடு

அரசு பஸ் பயணிக்கு ரூ.20,000 இழப்பீடு

அரசு பஸ் பயணிக்கு ரூ.20,000 இழப்பீடு


ADDED : அக் 26, 2025 02:08 AM

Google News

ADDED : அக் 26, 2025 02:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: அரசு பஸ் நாங்குநேரிக்குள் செல்லாமல், வேறு இடத்தில் இறக்கிவிட்டதால், பயணிக்கு, 20,000 ரூபாய் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கோர்ட்டில் வழக்கு திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியை சேர்ந்த தேவி, மகன்கள் இசக்கி அரவிந்த், நம்பிராஜன் ஆகியோர் 2024 மே 4ல் திருநெல்வேலியில் இருந்து நாங்குநேரிக்கு அரசு பஸ்சில் சென்றபோது, கண்டக்டர் நாங்குநேரிக்கு டிக்கெட் வழங்காமல், வள்ளியூருக்கு டிக்கெட் வழங்கி, 24- ரூபாய் கூடுதலாக வசூலித்தார்.

நாங்குநேரி பஸ் ஸ்டாண்ட் செல்லாமல், தாலுகா அலுவலகம் அருகே இரவு நேரத்தில் அவர்களை இறக்கிவிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக, அவர்கள் வழக்கறிஞர் பிரம்மா மூலமாக நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் கிளடஸ் டோன் பிளஸ்சட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், அரசு பஸ் நிர்வாகம் சேவை குறைபாட்டுக்கு அரசு போக்குவரத்துத் துறை, 10,000 ரூபாய் நஷ்டஈடு மற்றும் 10,000- ரூபாய் வழக்கு செலவு என, 20,000- ரூபாய் வழங்க உத்தரவிட்டனர்.

88 பிடியாணைகள் நுகர்வோர் குறைதீர் ஆணையம் வழங்கும் உத்தரவுகளில் அபராதம் மற்றும் இழப்பீடு தொகைகளை எதிர் தரப்பினர் வழங்காமல் காலதாமதம் செய்வதால், அந்த உத்தரவுகளை அமல்படுத்துவதற்காக நுகர்வோர் கோர்ட் போலீசாருக்கு பிடியாணை பிறப்பித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடுகிறது.

ஆனால், பிடியாணை பிறப்பித்த பிறகும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், ஐந்து ஆண்டுகளில், மொத்தம், 88 பிடியாணைகள் பிறப்பித்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.






      Dinamalar
      Follow us