ADDED : பிப் 22, 2024 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி என்.ஜி.ஓ., ஏ காலனியை சேர்ந்தவர் கண்ணன் 56.
உள்ளாட்சி தணிக்கை துறை ஆய்வாளர். அவரது மனைவி ஜெயந்தி 52, மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். ஒரு மகள் உள்ளார். கண்ணன் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார். பண இழப்புகள் ஏற்பட்டன. பிப்., 16ல் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் மனைவி பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். ரெட்டியார்பட்டி மலை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவில் அவரது உடல் மீட்கப்பட்டது.