ADDED : பிப் 11, 2025 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி, : சென்னை திருவொற்றியூர் விஜயன் 26. ராயபுரம் பவித்ரா 24. இருவரும் உறவினர்கள். காதலித்து சமீபத்தில் திருமணம் செய்தனர்.
இருவரும் அண்ணன், தங்கை உறவுமுறை வருவதால் திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் டூவீலரில் திருநெல்வேலி வந்தனர். கோட்டூர் ரோடு பகுதியில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கினர்.
நேற்று முன்தினம் இருவரும் அங்கு துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நேற்று உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தங்கள் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. உடல்களை உறவினரிடம் ஒப்படைக்க கேட்டு கடிதம் எழுதி வைத்திருந்தனர். உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.