/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
சேரன்மகாதேவியில் கனமழை வாழை, நெற்பயிர் சேதம்
/
சேரன்மகாதேவியில் கனமழை வாழை, நெற்பயிர் சேதம்
ADDED : அக் 05, 2025 01:57 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையினால் ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. நெற்பயிர்களும் சாய்ந்து கிடக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்களில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மூன்று மணி நேரம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.
இதனால் சேரன்மகாதேவி அருகே காருகுறிச்சி, உதயமார்த்தாண்டபுரம், கிரியம்மாள்புரம், கூனியூர், சக்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏராளமான வாழைகள் அடியோடு சாய்ந்தன.
விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூன் மாதம் துவக்கப்பட்ட கார் பருவ நெல் சாகுபடி தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது. வடகிழக்கு பருவமழை சற்று முந்திக் கொண்டதில் இந்த மழையினாலும் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கலெக்டர் சுகுமார் நேரில் பார்வையிட்டார்.