/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தமிழாகுறிச்சி அணைக்கட்டில் ஓட்டை :பா.ஜ.,வினர் மறியல் போராட்டம்
/
தமிழாகுறிச்சி அணைக்கட்டில் ஓட்டை :பா.ஜ.,வினர் மறியல் போராட்டம்
தமிழாகுறிச்சி அணைக்கட்டில் ஓட்டை :பா.ஜ.,வினர் மறியல் போராட்டம்
தமிழாகுறிச்சி அணைக்கட்டில் ஓட்டை :பா.ஜ.,வினர் மறியல் போராட்டம்
ADDED : நவ 28, 2025 12:05 AM

திருநெல்வேலி: தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டத்தில், தமிழாகுறிச்சி அணைக்கட்டில் ஓட்டை விழுந்து தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தக் கோரி, பா.ஜ.,வினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குழியிலிருந்து, திசையன்விளை அருகே எம்.எல்., தேரி வரையிலும் தாமிரபரணி வெள்ளநீர் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1,000 கோடி ரூபாயை ஒதுக்கி, மேற்கொண்ட அவரது கனவு திட்டம் இது. இதில், முன்னீர்பள்ளம் அருகே தமிழாகுறிச்சியில் பச்சையாறுக்கு குறுக்கே வெள்ளநீர் கால்வாய் திட்டம் வரும் பகுதியில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது.
தற்போது வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதால், பச்சையாறு அணைக்கட்டு நிரம்பியுள்ளது. அந்த அணைக்கட்டின் ஓரத்தில் ஓட்டை விழுந்து தண்ணீர் வெளியேறுகிறது. அதிகாரிகள் இதை கவனிக்காவிட்டால் அணைக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, பா.ஜ.,வினர் நேற்று, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, பொதுப்பணித்துறை அதிகாரிகள், அங்கு மணல் மூட்டைகளை அமைத்து, பச்சையாறு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.

