/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கவுன்சிலருக்கு கணவர் 'வாய்ஸ்' : திருநெல்வேலி மேயர் கடுப்பு
/
கவுன்சிலருக்கு கணவர் 'வாய்ஸ்' : திருநெல்வேலி மேயர் கடுப்பு
கவுன்சிலருக்கு கணவர் 'வாய்ஸ்' : திருநெல்வேலி மேயர் கடுப்பு
கவுன்சிலருக்கு கணவர் 'வாய்ஸ்' : திருநெல்வேலி மேயர் கடுப்பு
ADDED : நவ 10, 2025 11:38 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்திற்கு பெண் கவுன்சிலருக்கு பதிலாக அவரது கணவர் பேசியதால், மேயர் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
திருநெல்வேலி மாநகராட்சி கூட்டம், தி.மு.க.,வை சேர்ந்த மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. கமிஷனர் மோனிகா ரானா, அனைத்து வார்டு கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
மாநகராட்சி 2வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் முத்துலட்சுமி, தன் வார்டில், கழிவுநீர் கலந்த குடிநீர் வினியோகம் குறித்து, மேயரிடம் புகார் தெரிவித்தார். அப்போது முத்துலட்சுமியின் கணவர் சண்முகபாண்டியன் பேசினார்.
மேயர் குறுக்கிட்டு, 'கவுன்சிலர்கள் தான் பேச வேண்டும். உடன் வந்த பார்வையாளர்கள் பேச அனுமதி கிடையாது' என்றார். இருப்பினும், சண்முகபாண்டியன் தொடர்ந்து பேசவே, 'விதிமீறி இப்படி செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, முத்துலட்சுமி, கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.