/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பஸ்சில் அவமதிப்புக்கு எதிராக போராடிய பூஜாரிக்கு பாராட்டு
/
பஸ்சில் அவமதிப்புக்கு எதிராக போராடிய பூஜாரிக்கு பாராட்டு
பஸ்சில் அவமதிப்புக்கு எதிராக போராடிய பூஜாரிக்கு பாராட்டு
பஸ்சில் அவமதிப்புக்கு எதிராக போராடிய பூஜாரிக்கு பாராட்டு
ADDED : நவ 11, 2025 07:08 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் அரசு பஸ்சில் மதரீதியாக அவமதிக்கப்பட்ட போது தைரியமாக எதிர்த்து நின்ற கிராம கோவில் பூஜாரியை ஹிந்து முன்னணி பாராட்டியது.
திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பஸ்சில் மனைவி மற்றும் மகன்களுடன் பயணித்த பூஜாரி சுப்பிரமணியனை, கண்டக்டர் அந்தோணி அடிமை அவதூறாக பேசி அவமானப்படுத்தினார்.
மேலும், வள்ளியூர் ஊருக்குள் பஸ் செல்லாது எனவும் கூறி, மற்ற பயணிகளையும் தூண்டி விட்டார். இந்த அவமதிப்புக்கு எதிராக பூஜாரி சுப்பிரமணியன் துணிச்சலாக எதிர்த்து பஸ்சை வள்ளியூர் ஊருக்குள் செல்லச் செய்து, பின் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து ஹிந்து முன்னணி மாநில செயலர் கா.குற்றாலநாதன் வள்ளியூரில் உள்ள பூஜாரி சுப்பிரமணியன் வீட்டிற்கு சென்று அவரை பாராட்டினார். 'அநியாயத்துக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தது ஒவ்வொரு ஹிந்துவுக்கும் முன்மாதிரியாகும்' எனவும் கூறினார்.
கோட்ட தலைவர் தங்க மனோகர், செயலர் பிரம்மநாயகம், மாவட்ட செயலர் சிதம்பரம், பொருளாளர் பரமசிவம், துணைத்தலைவர் ஜெயக்கிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கணபதிராமன், நகர் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

