/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தாமிரபணியில் இறந்தவர் கொலையா என விசாரணை
/
தாமிரபணியில் இறந்தவர் கொலையா என விசாரணை
ADDED : பிப் 09, 2025 01:29 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் இறந்து கிடந்தவர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.
திருநெல்வேலி பொன்னாகுடியை சேர்ந்தவர் டேவிட் 44. மனைவி ராமு, இரு குழந்தைகள் உள்ளனர். திருநெல்வேலி டவுனில் கரும்புச்சாறு கடை நடத்தி வந்த இவர் சில தினங்களுக்கு முன் காணாமல் போனார்.
இங்கு ஜங்ஷன் சேந்திமங்கலம் தாமிரபரணி ஆற்றில் டேவிட் உடல் மீட்கப்பட்டது. மாநகர போலீஸ் துணை கமிஷனர் கீதாவிடம், டேவிட் மனைவி புகார் அளித்தார்.
அதில் 'தனது கணவர் லாரி தொழில் செய்து வந்தார். அவருக்கும், டிரைவராக பணியாற்றியவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.
எனவே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படுகிறேன். விசாரிக்க வேண்டும்' என தெரிவித்தார். தச்சநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

