/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மேலப்பாளையத்தில் பரவுது மஞ்சள்காமாலை
/
மேலப்பாளையத்தில் பரவுது மஞ்சள்காமாலை
ADDED : ஏப் 23, 2025 02:54 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி மேலப்பாளையம் பகுதியில் குடிநீரில் சாக்கடை கலந்து வருவதால் குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கும் மஞ்சள் காமாலை நோய் பரவி வருகிறது.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட மேலப்பாளையம் மண்டல பகுதியில் கல்வத்நாயகம் தெரு, அரசு மருத்துவமனை தெரு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய்களில் உட்புறமாக கழிவு நீர் கலந்துள்ளது. இதனால் மாநகராட்சி குடிநீர் கலங்கலாக வந்துள்ளது. இதை பருகிய பலருக்கும் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் ராணி கூறுகையில் '' மாநகராட்சி குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாக பொதுமக்கள் கூறியதால் கல்வத்நாயகம் தெருவில் குழிதோண்டி பைப் லைன் சீரமைக்கும் பணி நடக்கிறது. ஒரே பகுதியில் 6 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு இருப்பது சோதனையில் கண்டறியப்பட்டது. எனவே அங்கு மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம். கோடையில் மாநகராட்சி பகுதி முழுவதுமே பொதுமக்கள் குடிநீரை சுட வைத்து பருகும்படி கேட்டுக்கொள்கிறோம் என்றார்.