/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கவின் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று சுர்ஜித்திடம் விசாரணை
/
கவின் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று சுர்ஜித்திடம் விசாரணை
கவின் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று சுர்ஜித்திடம் விசாரணை
கவின் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அழைத்து சென்று சுர்ஜித்திடம் விசாரணை
ADDED : ஆக 13, 2025 01:42 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட இடத்திற்கு கைதான சுர்ஜித்தை அழைத்துச் சென்று சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலியில் மென் பொறியாளர் கவின் ஆணவக்கொலை வழக்கில் கைதான சுர்ஜித், அவரது தந்தை சரவணன் ஆகியோரிடம் இரு நாட்கள் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு கோர்ட் அனுமதி அளித்துள்ளது. நேற்று காலை முதல் தந்தை, மகன் இருவரிடமும் தனித்தனியாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஐம்பது கேள்விகள் கொண்ட பட்டியலுடன் இருவரும் ஒரே மாதிரியான தகவல்களை கூறுகிறார்களா, இந்த சம்பவத்தின் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளார்களா எனவும் விசாரித்தனர்.
டி.எஸ்.பி., ராஜ்குமார் நவ்ரோஜ், இன்ஸ்பெக்டர் உலக ராணி மற்றும் மதுரை அதிகாரி அருணாச்சலம் ஆகியோருடன் நேற்று சென்னையில் இருந்து வந்த எஸ்.பி., ஜவஹரும் இணைந்து விசாரணை மேற்கொண்டார்.
நேற்று மாலை 5:00 மணிக்கு சுர்ஜித்தை கொலை நடந்த கே.டி.சி.நகருக்கு சி.பி.சி.ஐ.டி.,யினர் அழைத்து சென்றனர். அங்கு அரிவாள், மிளகாய் பொடியை மறைத்து வைத்திருந்த இடம், கவினிடம் பேசிய இடம், வெட்டிக்கொலை செய்த இடம் ஆகியவற்றில் எப்படி சம்பவம் நடந்தது என்பதை விளக்கி செய்தும் காண்பித்தார்.
இதனை சி.பி.சி.ஐ.டி.,போலீஸ் போட்டோ, வீடியோகிராபர்கள் ஆவணப்படுத்தினர். பத்திரிக்கையாளர்கள் இருந்ததால் சுர்ஜித் முகத்தை கைகுட்டையால் முகத்தை மறைத்துக் கொண்டார். பத்திரிகையாளர்கள் வெளியேறினால் தான் கைகுட்டையை அகற்றுவேன் என சுர்ஜித் அடம் பிடித்தார். அவருக்கு ஆதரவாக போலீசாரும் பத்திரிகையாளர்களை வெளியேறுமாறு தெரிவித்தனர்.
இதனால் போலீசாருக்கும் பத்திரிகையாளர்களுக்கும் சலசலப்பு ஏற்பட்டது. பின் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்துக்கு சுர்ஜித்தை அழைத்து சென்றனர். இன்று இரண்டாவது நாள் விசாரணைக்கு பிறகு சுர்ஜித், அவரது தந்தை சரவணனை மாலை 6:00 மணிக்கு திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்துகின்றனர்.