UPDATED : நவ 25, 2026 06:18 PM
ADDED : நவ 25, 2026 06:18 PM
அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்த நிலையில், அதை தமிழக அரசு செயல்படுத்தவில்லை.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன் இந்து முன்னணி மாநில செயலாளர் வழக்கறிஞர் குற்றாலநாதன் தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது முதல்வர் விஜய் உருவ பொம்மையை தீயில் எரித்தும், அவரது புகைப்படத்தை காலணியால் அடித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., மற்றும் அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
