/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
பட்டியலின வாலிபர் ஆணவ கொலை நெல்லையில் பட்டப்பகலில் கொடூரம்
/
பட்டியலின வாலிபர் ஆணவ கொலை நெல்லையில் பட்டப்பகலில் கொடூரம்
பட்டியலின வாலிபர் ஆணவ கொலை நெல்லையில் பட்டப்பகலில் கொடூரம்
பட்டியலின வாலிபர் ஆணவ கொலை நெல்லையில் பட்டப்பகலில் கொடூரம்
ADDED : ஜூலை 28, 2025 03:08 AM
திருநெல்வேலி: நெல்லையில், மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்த பட்டியலின வாலிபரான சென்னை ஐ.டி., ஊழியர், பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி ஆணவ கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காதலியின் சகோதரனை போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி செல்வி. பள்ளி ஆசிரியை. இவர்கள் மகன் கவின், 27; சென்னையில் ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரை, நேற்று மதியம், 3:00 மணிக்கு, திருநெல்வேலி, கே.டி.சி. நகர் அஷ்டலட்சுமி கோவில் அருகே ஒருவர் டூ - வீலரில் அழைத்துச் சென்றார்.
அங்குள்ள தனியார் மருத்துவமனை முன் வைத்து, அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தார். கவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருநெல்வேலி மாநகர போலீசார் விசாரித்தனர்.
இதில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் மணிமுத்தாறு பட்டாலியன் போலீசில், சிறப்பு எஸ்.ஐ.,யாக பணிபுரிபவர்கள் சரவணன், அவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு, கேடிசி நகரில் வீடு உள்ளது.
இவர்கள் மகள் சித்த மருத்துவராக தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார்.
அவரை கவின் காதலித்துள்ளார். இந்த காதலுக்கு சித்த மருத்துவரின் தம்பி சுர்ஜித், 24, என்பவருக்கு விருப்பமில்லை. இதையடுத்து, நேற்று சுர்ஜித், டூ - வீலரில் கவினை அழைத்துச் சென்று, சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றது தெரிந்தது. சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட கவின், பட்டியல் இனத்தை சேர்ந்தவர். சுர்ஜித் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர். மாற்று சமூகத்தை சேர்ந்தவர் தன் சகோதரியை காதலிப்பதை ஏற்றுக்கொள்ளாமல் அவர் கொலை செய்தது தெரியவந்துள்ளது.