ADDED : பிப் 27, 2026 05:18 AM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி அருகே முத்துாரில் சட்டவிரோதமாக வெடி மருந்து திரி தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.
முத்துாரில் மெழுகுவர்த்தி தயாரிப்பதற்கு அனுமதி பெற்ற கட்டடத்தில் பட்டாசு, வெடிமருந்து திரி தயாரிக்கப்பட்டது. போலீசார் அங்கு சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்த வெடி மருந்து திரி, அதற்கான மூலப்பொருட்கள், திரி தயாரிக்கும் இயந்திரங்களை பறிமுதல் செய்து மாணிக்கராஜா 35 என்பவரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் விசாரிக்கின்றனர்.
