/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
15 பவுன் நகைகளை அடகு வைப்பதாக ரூ.9 லட்சம் மோசடி: மூன்று பேர் கைது
/
15 பவுன் நகைகளை அடகு வைப்பதாக ரூ.9 லட்சம் மோசடி: மூன்று பேர் கைது
15 பவுன் நகைகளை அடகு வைப்பதாக ரூ.9 லட்சம் மோசடி: மூன்று பேர் கைது
15 பவுன் நகைகளை அடகு வைப்பதாக ரூ.9 லட்சம் மோசடி: மூன்று பேர் கைது
ADDED : பிப் 28, 2026 05:26 AM

திருநெல்வேலி: திருநெல்வேலியில் 15 பவுன் நகைகளை அடகு வைக்க வேண்டும் எனக்கூறி ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் சபரத்துல்லா. இவர் பொதுமக்களிடமிருந்து நகைகளை பெற்று அடகு வைத்து உடனடியாக பணம் பெற்றுத்தரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர், தங்களிடம் 15 பவுன் நகைகள் இருப்பதாகவும், அதை அடகு வைத்து உடனே பணம் தர வேண்டும் எனவும் கூறி சபரத்துல்லாவை அணுகினர். அந்த நகைகள் வேறு இடத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதை மீட்க ரூ.9 லட்சம் தேவைப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அதனை நம்பிய சபரத்துல்லா அப்பெண் உள்ளிட்ட 3 பேரிடமும் ரூ.9 லட்சம் வழங்கினார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் தலை மறைவாயினர்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சபரத்துல்லா தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே அகரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ரங்கராஜன் 36, கீழமுன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த பால்குட்டி மகன் ஆறுமுககுமார் 43, திருநெல்வேலி தாழையூத்து வடக்கு பள்ளிவாசல் வீதி சுதாகரன் மனைவி விசாலாட்சி 40, ஆகியோரை கைது செய்தனர். மூவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

