/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வேகமாக பைக் ஓட்டியதை தட்டிக்கேட்ட பஞ்சாயத்தாரை எரிக்க முயன்றவர் கைது
/
வேகமாக பைக் ஓட்டியதை தட்டிக்கேட்ட பஞ்சாயத்தாரை எரிக்க முயன்றவர் கைது
வேகமாக பைக் ஓட்டியதை தட்டிக்கேட்ட பஞ்சாயத்தாரை எரிக்க முயன்றவர் கைது
வேகமாக பைக் ஓட்டியதை தட்டிக்கேட்ட பஞ்சாயத்தாரை எரிக்க முயன்றவர் கைது
ADDED : செப் 09, 2025 12:24 AM

திருநெல்வேலி; முக்கூடல் அருகே, டூ - வீலரில் வேக மாகச் சென்றதை தட்டிக்கேட்டவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இதில், ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஒருவர் காயமடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே இடைகால் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு, ஊர் பெரியவர்கள் கூடி பஞ்சாயத்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த வழியே அதே பகுதியைச் சேர்ந்த மகாராஜன், 35, என்பவர் டூ - வீலரில் வேகமாகச் சென்றார். இதை, ஊர் பெரியவர்கள் கண்டித்தனர்.
மகாராஜன் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின், ஆத்திரத்தில் கிளம்பிச் சென்றவர், பெட்ரோல் வாங்கி வந்து, பஞ்சாயத்தில் பேசிக் கொண்டிருந்தவர்கள் மீது ஊற்றி தீ வைத்தார்.
இதில், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியரான ராமகிருஷ்ணன், 66, என்பவர் உடலில் தீப்பற்றி, அவர் தீக்காயமுற்றார்.
இதைப் பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், மகாராஜனை தாக்கி, அரிவாளால் வெட்டினர். இதில், அவரும் பலத்த காயமடைந்தார். ராமகிருஷ்ணன், மகாராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மகாராஜன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மகாராஜன் புகாரில், எதிர் தரப்பைச் சேர்ந்த மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.