UPDATED : அக் 17, 2026 07:39 PM
ADDED : அக் 17, 2026 07:36 PM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி: தென்காசி மாவட்டம் கடையநல்லுார் அரசு மருத்துவமனையில் அமைச்சர்கள் அருண்ராஜ், ராஜீவ் பங்கேற்ற நிகழ்ச்சியில், மேலக்கடையநல்லுாரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென மேடையில் ஏறி அமைச்சர் ராஜீவை முற்றுகையிட்டனர்.
தங்கள் பகுதியில் 5 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லை. ரூ.500 கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு அமைச்சர் ராஜீவ், கலெக்டர் ரஞ்சித் சிங் ஆகியோர் விரைவில் தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பெண்கள் கலைந்து சென்றனர்.
