/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
2 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை
/
2 பெண் குழந்தைகளுடன் தாய் தற்கொலை
ADDED : அக் 13, 2025 11:35 PM

திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானை சேர்ந்தவர் முத்தையா, 38; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி முத்துலட்சுமி, 27. தம்பதிக்கு முத்தமிழ், 4, சுசிலாதேவி, 3 என, இரு குழந்தைகள் இருந்தனர்.
போதையில் மனைவியுடன் முத்தையா தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் காலை, முத்தையா இறைச்சி வாங்கி கொடுத்து சமைக்கும்படி கூறியுள்ளார். அதற்கு முத்துலட்சுமி மறுத்ததால் தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த முத்தையா, மனைவி, மகள்களை பருத்திக்குளத்தில் உள்ள மனைவியின் தாய் வீட்டில் விட்டார்.
நேற்று முன்தினம் இரவிலும் அவர் அங்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி, நேற்று காலை வெளியே செல்வதாக கூறி, தன் இரண்டு மகள்களையும் அழைத்து சென்றார். ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள கிணற்றில் குழந்தைகளை தள்ளிவிட்டு, தானும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.