/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
4 பேரை காவு வாங்கிய குவாரி; மீண்டும் இயக்க கருத்து கேட்பு
/
4 பேரை காவு வாங்கிய குவாரி; மீண்டும் இயக்க கருத்து கேட்பு
4 பேரை காவு வாங்கிய குவாரி; மீண்டும் இயக்க கருத்து கேட்பு
4 பேரை காவு வாங்கிய குவாரி; மீண்டும் இயக்க கருத்து கேட்பு
ADDED : அக் 13, 2025 11:41 PM
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தருவை ஊராட்சி அடைமிதிப்பான் குளம் பகுதியில் செயல்பட்ட ஒரு கல்குவாரியில், 2022 மே 14 இரவில் பாறை சரிந்து விழுந்ததில் நான்கு தொழிலாளர்கள் இறந்தனர். சிலர் காயமுற்றனர்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அந்த குவாரி 2023ல் மூடப்பட்டது. குவாரி நடத்தியவர்கள் கர்நாடகா மாநிலத்தில் சென்று தலைமறைவானதால் போலீசார் அங்கு சென்று கைது செய்தனர். தற்போது, அதே பகுதியில் புதிய கல்குவாரிக்கு அதே நிறுவனத்தினர் அனுமதி கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் இன்று திருநெல்வேலி செங்குளத்தில் தனியார் மண்டபத்தில் நடத்த உள்ளனர்.