/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
மின் கம்பத்தில் டூவீலர் மோதல் தாய், மகன் பலி
/
மின் கம்பத்தில் டூவீலர் மோதல் தாய், மகன் பலி
ADDED : ஜூன் 22, 2025 09:22 PM
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே மின் கம்பத்தில் டூவீலர் மோதியதில் தாய், மகன் பலியாயினர்.
துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்த மாரியப்பன் மனைவி சந்தனமாரி 50. மகன் இசக்கிராஜா 28. இருவரும் நேற்று காலை திருநெல்வேலி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் சாமியாடி குறி சொல்லும் ஜோதிடரை சந்தித்து வீட்டின் பிரச்னைகளை கூறி தீர்வு கேட்டு, டூவீலரில் திரும்பிக்கொண்டிருந்தனர். 11:30 மணியளவில் திருநெல்வேலி - -திருச்செந்துார் ரோட்டில் கிருஷ்ணாபுரம் அடுத்த புவி ஈர்ப்பு மையம் அருகே சென்றபோது ரோட்டோரம் இருந்த மின் கம்பத்தில் டூவீலர் மோதியது. இதில் இருவரும் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் பலியாயினர். சிவந்திபட்டி இன்ஸ்பெக்டர் சுதா விசாரித்தனர்.