/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
தமிழகத்தில் பழனிசாமி தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நயினார் நாகேந்திரன் மீண்டும் உறுதி

ADDED : ஜூன் 12, 2025 01:56 AM

திருநெல்வேலி,:திருநெல்வேலியில் பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
2014ம் ஆண்டு பா.ஜ. மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றது முதல் தற்போது வரை 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி, மூலதன செலவுக்கு மட்டும் ரூ 112 லட்சம் கோடி வழங்கியுள்ளார். 85 புதிய விமான நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 400க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள், சாலை விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பாரம்பரிய விவசாயத்தை மேம்படுத்த அரசு முக்கியத்துவம் தருகிறது.
சுகாதாரத்துறைக்கும் நிறைய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு மட்டும், ஜி.எஸ்.டி. தவிர பத்து லட்சம் கோடி ரூபாய் நிதி தனியாக வழங்கியுள்ளது. தமிழகத்துக்கு 11 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாகத்தான் உள்ளது. நேற்று முன்தினம் கூட தமிழகத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்து பழனிசாமி தலைமையில் பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் ஆட்சி அமையப் போகிறது.
கீழடி ஆய்வு விவாகரத்தில் மத்திய அரசை வலியுறுத்துவேன்.
தமிழர்களின் பண்பாடு தொன்மை பாரம்பரியத்தை பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் சொல்லி வருகிறார்.
மதுரையில் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டில் சுமார் 4 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.
தற்போது திருநெல்வேலி எம்.எல்.ஏ.,வான நயினார் நாதேந்திரன் வரும் தேர்தலில் நாங்குநேரி தொகுதிக்கு மாற உள்ளதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் புன்னகைத்தார்.