/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
முதல்வர் ஸ்டாலின் பீஹார் சென்றது வருத்தமளிக்கிறது; சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

UPDATED : ஆக 29, 2025 09:45 AM
ADDED : ஆக 29, 2025 05:39 AM

திருநெல்வேலி: ''முதல்வர் ஸ்டாலின் பீஹார் சென்றது வருத்தம் அளிக்கிறது. அங்கு வாக்காளர் பட்டியல் சர்ச்சையில் நடந்தது என்ன என தனது உளவுத்துறையின் மூலம் விசாரித்த பிறகு முதல்வர் சென்று இருக்கலாம்,'' என திருநெல்வேலியில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: யார் கூப்பிட்டாலும் பின்னால் போயிடலாம் என செயல்படும் முதல்வரை நினைத்து கொஞ்சம் வருத்தமாக உள்ளது. திருநெல்வேலியில் செப்., 7 காங்கிரஸ் நடத்தும் மாநாடு, இன்னும் நான்கு ஆண்டுகள் காங்கிரசை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான ஏற்பாடு மட்டுமே.
திருவண்ணாமலை, திருச்செந்தூர் போன்ற பெரிய கோயில்களை நிர்வகிக்க அறநிலையத்துறைக்கு பதில் தேவஸ்தானம் போர்டு என்ற உயர்நீதிமன்ற கருத்தை வரவேற்கிறேன்.
ஹிந்து அறநிலையத்துறை கூடாது என்பது தான் பா.ஜ., நிலைப்பாடு. 2026 தேசிய ஜனநாயக கூட்டணியில் பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற பிறகு நிச்சயமாக நடக்கும் என்றார்.