/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
வேரோடு பிடுங்கி நட்டால் பயிர் நன்றாக வளரும் அமித்ஷா பேச்சுக்கு நேரு பதில்

ADDED : ஆக 23, 2025 08:15 PM
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் ரூ.5 கோடியில் முதல்வர் படைப்பகத்திட்டத்திற்கான கட்டுமானப்பணிகளை சபாநாயகர் அப்பாவு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி துவக்கினர்.
பின் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது: பா.ஜ., மத்திய அமைச்சர் அமித்ஷா ''தி.மு.க.வை வேரோடு சாய்ப்போம்,'' எனக் கூறியுள்ளார். விவசாயத்தில் வேரோடு பிடுங்கி நடும் பயிர்தான் பெரிதாக வளரும். 15 ஆண்டுகளாக பா.ஜ., இந்த வேலையை தான் செய்கிறது. எங்கள் கூட்டணியே வெற்றி பெற்று வருகிறது. எதிர்காலத்திலும் தி.மு.க., கூட்டணிதான் வெற்றி பெறும்.
அமித்ஷா, அ.தி.மு.க, பொது செயலாளர் பழனிசாமி இருவரும் கூட்டணியைப்பற்றி ஒரே கருத்தில் இல்லை. அடித்தள தொண்டர்களும் இக்கூட்டணியை ஏற்கவில்லை. அ.தி.மு.க., தரப்பில் இருண்ட ஆட்சி நடந்தது. இன்று தி.மு.க.,ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது.
முதல்வர் ஸ்டாலினுக்கு மக்கள், குறிப்பாக மகளிர், பெரும் ஆதரவு வழங்கி வருகின்றனர். எம்.ஜி.ஆர்., பெற்றிருந்த ஆதரவை விட இன்று மகளிர் ஆதரவு ஸ்டாலினுக்கு அதிகரித்துள்ளது. வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார். தமிழகத்தில் தி.மு.க.,விற்கு போட்டியே இல்லை என்றார்.