/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை அலங்கார் தியேட்டர் குண்டு வீச்சு: முக்கிய குற்றவாளி இம்தியாஸ் கைது
/
நெல்லை அலங்கார் தியேட்டர் குண்டு வீச்சு: முக்கிய குற்றவாளி இம்தியாஸ் கைது
நெல்லை அலங்கார் தியேட்டர் குண்டு வீச்சு: முக்கிய குற்றவாளி இம்தியாஸ் கைது
நெல்லை அலங்கார் தியேட்டர் குண்டு வீச்சு: முக்கிய குற்றவாளி இம்தியாஸ் கைது
ADDED : ஜன 23, 2025 08:58 PM

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி இம்தியாஸ் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மேலப்பாளையம் அலங்கார் சினிமா தியேட்டரில் அமரன் படம் திரையிடப்பட்டிருந்த போது நவம்பர் 16 அதிகாலையில் மர்ம நபர்கள் 3 பாட்டில்களில் அடைத்துக் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் காயம் இல்லை. தியேட்டரில் சேதமும் இல்லை. இந்த சம்பவத்தில் முதலில் உள்ளூர் போலீசார் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் விசாரித்து இருவரை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு தமிழக போலீஸ் தீவிரவாத தடுப்பு பிரிவிற்கு மாற்றப்பட்டது. தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி.ரமேஷ் கிருஷ்ணன் தலைமையில் குழுவினர் மேலப்பாளையத்தில் முகாமிட்டு விசாரித்தனர்.
அமரன் படத்திற்கு எதிராக சித்தாந்த அடிப்படையில் தீவிரவாத நோக்கத்துடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தெரியவந்தது, இதன் பின்னணியில் முக்கிய நபராக செயல்பட்ட மேலப்பாளையம் அல்அமீன் நகரை சேர்ந்த இம்தியாஸ் 42, தலைமறைவாக இருந்தார். தீவிரவாத அமைப்பை சேர்ந்த அவர் மீது வேறு வழக்குகள் உள்ளன. அவரை போலீசார் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கைது செய்தனர்.
5 பேர் கைது:
இந்த குண்டுவீச்சு சம்பவத்தில் ஏற்கனவே மேலப்பாளையத்தைச் சேர்ந்த செய்யது முகமது புகாரி, முகம்மது யூசுப் ரஷீன், கோலா பாதுஷா, சிராஜுதீன், நிசார் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.மேலும் தொடர்புடைய நபர்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

