/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை பல்கலை தேர்வு வினாத்தாள் அவுட்: 6 பிரிவுகளில் வழக்கு பதிவு
/
நெல்லை பல்கலை தேர்வு வினாத்தாள் அவுட்: 6 பிரிவுகளில் வழக்கு பதிவு
நெல்லை பல்கலை தேர்வு வினாத்தாள் அவுட்: 6 பிரிவுகளில் வழக்கு பதிவு
நெல்லை பல்கலை தேர்வு வினாத்தாள் அவுட்: 6 பிரிவுகளில் வழக்கு பதிவு
ADDED : ஜூன் 01, 2025 12:58 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தேர்வு வினாத்தாள் அவுட் ஆனது குறித்து போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இப்பல்கலையின் கீழ் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கல்லூரிகள் செயல்படுகின்றன.
மே 27 ல் கல்லூரிகளில் பி.காம் மாணவர்களுக்கான இன்டஸ்ட்ரியல் லா தேர்வு நடந்தது.
விடைத்தாள் கொடுத்து தேர்வு துவங்க இருந்த சில நிமிடங்களில் ஏற்கனவே வினாத்தாள் அவுட் ஆகிவிட்டதாக கூறி அனைத்து கல்லூரிகளிலும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
அதற்கான மாற்றுத்தேர்வு மே 30ல் நடந்தது.
தேர்வு வினாத்தாள் கசிந்தது குறித்து குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்கலை பதிவாளர் சாக்ரடீஸ் திருநெல்வேலி பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.
மே 27 காலை நடக்க இருந்த இன்டஸ்ட்ரியல் தேர்வு வினாத்தாள் பிரதியை அதற்கு முதல்நாள் மே 26 இரவில் பல்கலை தேர்வாணையர் பாலசுப்பிரமணியத்தின் அலைபேசி வாட்ஸ்ஆப்க்கு யாரோ ஒரு நபர் அனுப்பியுள்ளார்.
எனவே இந்த முறைகேடு குறித்த பேட்டை போலீசார் குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவுகள் 316, 318, 3(5), தமிழ்நாடு அரசு பொதுத்தேர்வுகள் சட்டம் 3, 4 மற்றும் 5 ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே தேர்வாணையர் அலைபேசி வாட்ஸ் ஆப்-க்கு வினாத்தாள் அனுப்பிய எண் குறித்து போலீசார் சோதனை செய்த போது மதுரையை சேர்ந்த அறிவுச்செல்வன் என தெரியவந்தது. அவர் குறித்தும் விசாரணை நடக்கிறது.