/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழா
/
நெல்லை பல்கலை பட்டமளிப்பு விழா
ADDED : பிப் 04, 2024 02:50 AM

திருநெல்வேலி,: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் நடந்த, 30வது பட்டமளிப்பு விழாவில், கவர்னர் ரவி பங்கேற்று, 459 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
திருநெல்வேலி அபிஷேகபட்டி பல்கலை வளாகத்தில் நடந்த விழாவில் துணைவேந்தர் சந்திரசேகர் வரவேற்றார்.
தங்கப்பதக்கம் பெற்ற, 108 பேர், முனைவர் பட்டம் பெற்ற 351 பேர் என மொத்தம், 459 பேருக்கு கவர்னர் ரவி பட்டங்களை வழங்கினார்.
ராஜஸ்தான் தொழிநுட்ப பல்கலை முன்னாள் துணைவேந்தர் நளினாஷ் வியாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ''முற்போக்கான மனநிலையே முன்னேற்றத்தை தூண்டும் நேர்மறையான சக்தியாகும்.
''மாணவர் சமூகம் மற்றும் பல்கலை திறன் மேம்பாட்டுக்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய வேண்டும். இந்தப் பகுதியில் உள்ள பல்வேறு வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்,'' என்றார்.
தமிழக உயர்நிலைத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் விழாவை புறக்கணித்தார். திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக கண்டக்டராக பணிபுரிந்தவர் முருகன், 74. பணிபுரிந்த போது பத்தாம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார்.
அவர் ஓய்வுக்கு பிறகு தமிழ் இலக்கியத்தில் இளங்கலை, முதுகலை முடித்து, தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றார்.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டங்கள் பெற்ற மாணவர்களுடன் கவர்னர் ரவி, ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலை முன்னாள் துணைவேந்தர் நளினாஷ் வியாஸ்