/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நெல்லையில் அனுமதியில்லா புது பஸ் ஸ்டாண்ட் நாளை திறப்பு அரசு துறைகளில் அனுமதி பெறாததால் அதிர்ச்சி

UPDATED : பிப் 17, 2024 02:51 AM
ADDED : பிப் 17, 2024 02:09 AM

திருநெல்வேலி: திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே இருந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்காக உள்ளூர் திட்டக் குழுமத்தின் அனுமதி பெறவில்லை.
தீயணைப்பு துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், போக்குவரத்து துறை கமிஷனர், நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத்துறை என அரசின் எந்த துறைகளிலும் அனுமதி பெறப்படவில்லை. இதனால், இன்னமும் துறைகளில் அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட தி.மு.க., செயலர் மைதீன் கான், தி.மு.க., - எம்.எல்.ஏ., அப்துல் வகாப் ஆகியோர் இல்ல திருமணங்களில் பங்கேற்க நாளை அமைச்சர் உதயநிதி திருநெல்வேலி வருகிறார்.
அவர் வருகையை அரசு விழாவாக்கிய அதிகாரிகள், பஸ் ஸ்டாண்ட் உட்பட அனுமதி பெறாத திட்டங்களை அவசரமாக துவக்கி வைக்க உள்ளனர்.
சமூக ஆர்வலர் பெர்டின் ராயன் கூறியதாவது:
அரசு அதிகாரிகளே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளுக்கு, எந்த முன் அனுமதியும் பெறாமலேயே பணிகளை முடித்துள்ளனர். தீயணைப்பு துறை அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களால் மக்களுக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அதிகாரிகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு முன், அங்கு பள்ளம் தோண்டி மணல் அள்ளப்பட்டது. மணலை அதிகாரிகள் அரசுக்கு கணக்கு காட்டாமல் விற்பனை செய்தனர்.
இது தொடர்பாக மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் சுடலைக்கண்ணு என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த, 2023 டிச., 17, 18ல் பெய்த மழையில் ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் முழுதும் மூழ்கியது. இங்கு, கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கியது குறிப்பிடத்தக்கது.