/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கூட்டணி குறித்து பிப்.14க்குள் அறிவிப்பு; சொல்கிறார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
/
கூட்டணி குறித்து பிப்.14க்குள் அறிவிப்பு; சொல்கிறார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
கூட்டணி குறித்து பிப்.14க்குள் அறிவிப்பு; சொல்கிறார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
கூட்டணி குறித்து பிப்.14க்குள் அறிவிப்பு; சொல்கிறார் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி
ADDED : பிப் 07, 2026 05:46 AM
திருநெல்வேலி: ''கூட்டணி குறித்து பிப்.14க்குள் அறிவிக்கப்படும்'' என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
திருநெல்வேலியில் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. தேர்தலுக்கான கூட்டணி தொடர்பான இறுதி முடிவு பிப்.12 முதல் 14ம் தேதிக்குள் அறிவிக்கப்படும்.
தற்போது அரசியல் களத்தில் வெளியாகும் செய்திகள் வெறும் பரபரப்பே தவிர இறுதியானவை அல்ல.
எங்கள் கட்சிக்கு 60 முதல் 70 தொகுதிகளில் வெற்றியை தீர்மானிக்கும் அளவிலான ஓட்டு வங்கி உள்ளது. குறிப்பாக பொதுத் தொகுதிகளில் கட்சிக்கு வலுவான ஆதரவு இருக்கிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் மின்சாரம், குடிநீர், ரேஷன் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு. 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இடத்தில் 30 குடும்பங்கள் மட்டுமே இருப்பதாக தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கும் முயற்சியும் நடக்கிறது.
பிப்.12ல் நீதிமன்றத்தில் இந்த அநீதிக்கு எதிராக வலுவாக வாதாடுவோம். தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்.
தி.மு.க., ஆட்சியில் 100 நாள் வேலைத் திட்டம், குடிநீர் திட்டங்கள் முறையாக செயல்படவில்லை. தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்க தயாராகி வருகிறோம் என்றார்.

