sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 30, 2026 ,பங்குனி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 மோடி பொதுக்கூட்டம் மார்ச் 1க்கு மாற்றம்

/

 மோடி பொதுக்கூட்டம் மார்ச் 1க்கு மாற்றம்

 மோடி பொதுக்கூட்டம் மார்ச் 1க்கு மாற்றம்

 மோடி பொதுக்கூட்டம் மார்ச் 1க்கு மாற்றம்


UPDATED : பிப் 07, 2026 06:46 AM

ADDED : பிப் 07, 2026 05:46 AM

Google News

UPDATED : பிப் 07, 2026 06:46 AM ADDED : பிப் 07, 2026 05:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: 'மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மார்ச் 1க்கு மாற்றப்பட்டுள்ளது'' என பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருநெல்வேலியில் நேற்று அவர் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க., கூறியபடி மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை ஆட்சி அமைந்ததும் வழங்காமல் 2 ஆண்டுகள் கழித்தே வழங்கத் தொடங்கினர். பொங்கலுக்கு இந்த ஆண்டு மட்டும் ரூ.3,000 வழங்கியுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக வழங்கவில்லை.

சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு ரூ.2,000 வழங்கும் நோக்கில் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி வீதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் உள்ளது. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

தி.மு.க., ஆட்சிக் காலத்தில் இதுவரை 33 காவல் நிலைய மரணங்கள் நடந்துள்ளன. மதுரையில் பிப்.,28 ல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மார்ச் 1க்கு மாற்றப்பட்டுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள் இதில் கலந்து கொள்வார்கள்

நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட வரி அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவர் ஊழல் செய்ய மாட்டேன் எனக்கூறி வந்தார். இப்போது விஜய்க்கு எதிராக 'விசில்' அடிக்கத் தொடங்கியுள்ளோம். இனி ஒன்றிணைந்து அவருக்கு எதிராக 'டிரம்ஸ்' அடிப்போம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்னும் இரண்டு நாட்களில் நேரில் சென்று பார்வையிட உள்ளேன் என்றார்.






      Dinamalar
      Follow us