ADDED : அக் 15, 2026 07:44 PM

அ நிறம் | அளவு
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தில் செயல்படும் ஜாய் பல்கலையில் பி.எஸ்சி., நர்சிங் படிக்கும் மாணவர்களுக்கு இந்திய நர்சிங் கவுன்சில் (ஐ.என்.சி.,), தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமம் (டி.என்.சி.,) ஆகியவற்றின் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அங்கீகாரம் பெற வலியுறுத்தி மாணவர்கள் இன்று பல்கலை முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்களிடம் பல்கலை நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைத் தொடர்வதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
