/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
நவ., 10ல் தாமிரபரணியில் நீதிபதிகள் ஆய்வு
/
நவ., 10ல் தாமிரபரணியில் நீதிபதிகள் ஆய்வு
ADDED : நவ 06, 2024 02:11 AM
மதுரை:துாத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லுாரைச் சேர்ந்த காமராஜ், 2018ல் தாக்கல் செய்த பொதுநல மனுவில், இரு நீதிபதிகள் அமர்வு அவ்வப்போது உத்தரவு பிறப்பிக்கிறது.
இதன் அடிப்படையில் அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு நேற்று விசாரித்தது.
திருநெல்வேலி மாநகராட்சி கமிஷனர் சுகபுத்ரா ஆஜராகி, 'கழிவுநீர் கலப்பதை தடுக்க இரண்டாம் கட்ட பணியில் 90 சதவீதம் முடிந்துள்ளது. மீதம் 10 சதவீத பணி டிசம்பரில் முடிவடையும். மூன்றாம் கட்ட பணி 2025 செப்டம்பருக்குள் நிறைவடையும்' என, தெரிவித்தார்.
நீதிபதிகள், 'நாங்கள் இருவரும் நவ., 10ல் தாமிரபரணி ஆற்றில் 20 இடங்களில் ஆய்வு செய்ய உள்ளோம். உடன் திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகள் வர வேண்டும். ஆய்விற்கு பின் மேல் நடவடிக்கை குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும். விசாரணை நவ., 15க்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என, உத்தரவிட்டனர்.