sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

 தரமற்ற காலை உணவை குப்பையில் வீசி நெல்லை துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு

/

 தரமற்ற காலை உணவை குப்பையில் வீசி நெல்லை துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு

 தரமற்ற காலை உணவை குப்பையில் வீசி நெல்லை துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு

 தரமற்ற காலை உணவை குப்பையில் வீசி நெல்லை துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு


ADDED : ஜன 31, 2026 05:38 AM

Google News

ADDED : ஜன 31, 2026 05:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் வழங்கிய காலை உணவு, தரமற்ற நிலையில் இருப்பதாக கூறி, உணவை குப்பையில் கொட்டி, தச்சநல்லுார் பகுதி துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சியில் நிரந்தர துாய்மை பணியாளர்கள், 220 பேர்; ராம் அண்ட் கோ நிறுவனம் மூலம், 850 பேர்; சுய உதவி குழுக்கள் மூலம் 523 பேர் என, 1,600 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

தச்சநல்லுார் மற்றும் மேலப்பாளையம் மண்டலங்களில் மட்டும் பரிசோதனை அடிப்படையில், 550 துாய்மை பணியாளர்களுக்கு ஒரு வாரமாக காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தனியார் நிறுவனம் மூலம் டிபன் கேரியரில், துாய்மை பணியாளர்கள் பணியாற்றும் இடங்களுக்கே வந்து வழங்கப்படுகிறது.

ஆனால், தினமும் ரவா உப்புமா, சேமியா, பொங்கல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டாலும், அவை தரமற்றதாகவும், உணவு வைக்கப்படும் பாத்திரங்கள் முறையாக சுத்தம் செய்யப்படாத நிலையில் இருப்பதாகவும் துாய்மை பணியாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தச்சநல்லுாரில் நேற்று வழங்கப்பட்ட காலை உணவு தரமற்று இருப்பதாக கூறி, குப்பையில் கொட்டி, துாய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மாநகராட்சியில் பணியாற்றும் அதிகாரி பெயரிலேயே இந்த டெண்டர் எடுத்து உணவு வழங்கப்படுவதாகவும், அதனால் தரமற்றதாக இருப்பதாகவும் துாய்மை பணியாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதற்கிடையே, 'சமூகநீதி' குறித்து பிறருக்கு வகுப்பெடுக்கும் முதல்வர் ஸ்டாலின், ''அவரது மகன் அல்லது ஏதேனும் ஒரு தி.மு.க., தலைவர், துாய்மை பணியாளர்களுக்கு அரசு வழங்கும் உணவை சாப்பிடுவரா?'' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி, துாய்மை பணியாளர்களுக்கு தரமான உணவு வழங்க வலியுறுத்தி உள்ளார்.






      Dinamalar
      Follow us