/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கவுன்சிலர் இறப்பை தெரிவிக்காத ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'
/
கவுன்சிலர் இறப்பை தெரிவிக்காத ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'
கவுன்சிலர் இறப்பை தெரிவிக்காத ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'
கவுன்சிலர் இறப்பை தெரிவிக்காத ஊராட்சி செயலர் 'சஸ்பெண்ட்'
ADDED : ஏப் 27, 2025 03:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே, ஊராட்சி உறுப்பினர் இறந்ததை அரசுக்கு தெரியப்படுத்தாத ஊராட்சி செயலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் ஒன்றியம் அப்புவிளை ஊராட்சி இரண்டாவது வார்டு உறுப்பினர் சுடலைமுத்து, 2023 அக்., 16ல் இறந்தார்.
அந்த தகவலை அரசுக்கு உடனடியாக தெரிவிக்காததால், ஊராட்சி செயலர் சுமிலாவை, மாநில தேர்தல் ஆணையம் கண்டித்தது.
வார்டு உறுப்பினர் இறப்பு குறித்து காலதாமதமாக, 2025 மார்ச்சில் தெரிவித்ததால் ஊராட்சி செயலரை 'சஸ்பெண்ட்' செய்து ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.